முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் டிசம்பர் வரை இலவச உணவுப்பொருட்கள்: முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இலவச மளிகை கிட் விநியோகம் தொடரும் என முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். 

கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநிலம் முழுவதும் 88 லட்சத்து 42 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை கிட் விநியோகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் டிசம்பர் வரை இந்த திட்டம் தொடரும் என்றார். மேலும் அவர் கூறுகையில், 

கொரோனா தொற்றுநோய் மாநிலத்தில் உள்ள அனைவரையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கொரோனா பரவத் தொடங்கி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களிலும், ஓணம் பண்டிகை காலத்திலும் இதேபோன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் ரேசன் கடைகள் மூலமாக அரிசியும் விநியோகிக்கப்படுகிறது.  இலவச உணவு கிட் திட்டம் மூலம் குறைந்தது 88 லட்சத்து 42 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து