முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பணியிடத்தில் பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ள அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நஹ்யான், 

வேலைவாய்ப்புச் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த புதிய சட்டத்திருத்தங்கள் பாலின சமத்துவத்துக்கான அடுத்தகட்ட நகர்வாக நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அன்வர் கார்ஷ் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கும் புதிய காலடி. சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்த சட்டம் மாற்றங்களை உருவாக்கும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து