வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Supreme Court 2020 09 28

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளத்தைச் சேர்ந்த டி.என்.பிரபாகரன் எம்.பி. சுப்ரீம் கரோ்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் சுப்ரீம் கோர்ட்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்‍கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விவாதிக்‍க கேரள அமைச்சரவை கூடியது. அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்  வழக்‍கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளத்தைச் சேர்ந்த டி.என்.பிரபாகரன் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த 3 வேளாண் சட்டங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து