முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரியை ரத்து செய்யக் கோரிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை: அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்ததால் மனுவை வாபஸ் பெற்றார்

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரியை ரத்து செய்யக் கோரிய நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரித்தார். அதை தொடர்ந்து மனுவை வாபஸ் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். 

நோட்டீஸ்

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ. 6.50 லட்சத்தை செலுத்தும் படி மாநகராட்சி நிர்வாகம் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  

மனு விபரம்

அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் வருமானம் ஏதும் வரவில்லை. எனவே சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.  

எச்சரிக்கை

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.  

மனுவை திரும்ப பெற்றார்

இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். தொடர்ந்து வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ரஜினிக்கு ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து