முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிசான் திட்ட மோசடியில் தமிழகம் முழுவதும் இதுவரை 101 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் கிசான் திட்டம் மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முறைகேடாக பெற்ற பல கோடி ரூபாய் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வந்தது.

இதையடுத்து கிசான் முறைகேடு வழக்கானது சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது. இதை தொடர்ந்து கிசான் மோசடியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கிசான் திட்டம் மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் கிசான் முறைகேடு தொடர்பாக 100 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து