2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் சர்வதேச விதிமுறைகளின்படி நடைபெறும்; மத்திய மந்திரி நக்வி பேட்டி

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
Mukhtar-Naqvi 2020 10 19

Source: provided

புதுடெல்லி : இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும்.  வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் பற்றிய முக்கிய காரணிகளை முடிவு செய்வதற்காக உயர்மட்ட அளவிலான கூட்டம் ஒன்று நேற்று நடந்தது.  இதில், மத்திய சிறுபான்மையோர் மந்திரி முக்தார் நக்வி கலந்து கொண்டார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.  வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, இதுபற்றிய அனைத்து இறுதி முடிவுகளும், சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து