முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றை தடுக்க புதிய தடுப்பு மருந்து மத்திய அரசு அனுமதி: மூக்குவழியாக தெளிக்கப்படும்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவை தடுக்க புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மூக்கு வழியாக தெளிக்கப்படும் தடுப்பு மருந்து பரிசோதனை விரைவில் நடைபெற உள்ளது. 

கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பூசி பரிசோதனைகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசிகளின் பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகியவை மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்று தெரிவித்தார்.

தேவையான நடைமுறை ஒப்புதல் கிடைத்த பின்னர்  இந்த பரிசோதனை தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவ கல்லூரியோடு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி அந்த நிறுவனம் சார்ஸ் கோ விட் தடுப்பு மருந்து பரிசோதனை, தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றும், சீரம் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் விரைவில் இறுதி கட்ட பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இப்போது உடலில் செலுத்தும் ஊசி வகையிலான தடுப்பூசி பரிசோதனைகள்  வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்து உருவாக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து