முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முன்னாள் அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி காலமானார்

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி காலமானார்.

தெலுங்கானா முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமிர கட்சியின் மூத்த தலைவருமான நைனி நரசிம்ம ரெட்டி (வயது 86) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அந்த பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தார்.  

இந்நிலையில், நைனி நரசிம்ம ரெட்டி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  சந்திரசேகரராவுக்கு மிகவும் நெருக்கமான தலைவராக திகழ்ந்தவர் நைனி நரசிம்ம ரெட்டி.  2014-ம் ஆண்டு சந்திரசேகர ராவ் முதல் முறையாக ஆட்சியமைத்த போது, நைனி நரசிம்ம ரெட்டி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து