வழி தவறி வந்த சீன வீரர் உளவாளி என சந்தேகம்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
India-China 2020 10 24

Source: provided

லடாக் : சில நாட்கள் முன்பு லடாக்கில் வழி தவறி வந்த சீன வீரரை இந்தியா மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்த நிலையில் அவர் உளவாளியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய - சீன எல்லையில் தனியாய் திரிந்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்தது. விசாரணையில் அவர் வழி தவறி வந்ததாக தெரிய வர, பிறகு அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த இந்திய ராணுவம் அவரை சீனாவிடம் திரும்ப ஒப்படைத்தது. 

இந்நிலையில் அவர் பிடிபட்ட போது அவரிடம் செல்போன், தகவல்களை சேமிக்கும் கருவி, படுக்கை உள்ளிட்டவை இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் வந்தவர் வழிதவறிதான் வந்தாரா அல்லது உளவு பார்க்க ஏற்பாடுகளுடன் வந்த ஆளா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து