ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      விளையாட்டு
IPL-play-offs 2020 10 26

Source: provided

ஷார்ஜா : ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. எட்டு அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, துபாய், அபு தாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நவம்பர் 3-ந்தேதி முடிவடைகிறது.

10-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

நவம்பர் 5-ந்தேதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்) துபாயில் நடைபெறுகிறது.

நவம்பர் 6-ந்தேதி எலிமினேட்டர் (3-வது மற்றும் 4-வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது. நவம்பர் 8-ந்தேதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி - எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது. நவம்பர் 10-ந்தேதி (குவாலிபையர் 1 வெற்றி - குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து