முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு : ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : பாகிஸ்தான் உடனான ஆப்கன் ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை அட்டாரி வாகா எல்லை வழியாக அனுமதித்து வருகிறது பாகிஸ்தான். ஆனால், அவ்வாறு இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த வகையில் 30 சதவீத வெங்காயத்தை மட்டுமே இந்தியா கொண்டு செல்ல முடிவதாகவும், 70 சதவீதம் கால தாமதத்தால் வீணாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இருவழி வர்த்தகம் நடைபெற, தனது நிலப்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. 

இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஆப்கானிஸ்தான் கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அட்டாரி வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை கொண்டு வர பாகிஸ்தான் அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து