ஒலிம்பிக் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2020      விளையாட்டு
Olympic 2020 11 17

Source: provided

டோக்கியோ : 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ம் ஆண்டில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஜப்பான் சென்றுள்ளார். 

அங்கு அவர் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் போட்டி அமைப்பாளர்களை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும்.

போட்டி பாதுகாப்பான முறையில் நடைபெற எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்து இருக்கிறது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து