முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா: டேராடூனில் ஞாயிறுதோறும் கடையடைப்பு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

டேராடூன் : டேராடூனில் ஞாயிற்றுக்கிழமைகளில் இனி வாரந்தோறும் கடையடைப்பு என உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகாண்ட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதையொட்டி மாநில அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 67514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தற்போது 4812 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதனால் உத்தரகாண்ட்டில் மீண்டும் தளர்வுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  கல்லூரிகள் டிசம்பரில் அநேகமாக மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அமைச்சர் மதன் கவுசிக் கூறிய நிலையில் தற்போது அம்முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் அரசு கல்லூரிகளை மீண்டும் திறப்பதை ஒத்திவைத்துள்ளது. 

டேராடூனில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு டெல்லியிலிருந்து டேராடூனுக்கு வருபவர்களுக்கு கோவிட் 19 பரிசோதனை செய்யப்படுவதாக மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.  தற்போது மாநில தலைநகரில் வாரந்தோறும் ஞாயிறு அன்று கடையடைப்புக்கும் உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆசிஷ் கே.ஸ்ரீவத்ஸவ்  கூறுகையில், மாநிலத்தின் தலைநகராக உள்ள டேராடூன் நகரத்தில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் நகரின் அனைத்து சந்தை இடங்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர்த்து, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலாகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து