முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி வரும் 4-ம் தேதி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தினமும் அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. ஆனாலும் டெல்லி, கேரளா போல அதிக அளவில் பாதிப்புகள் பதிவாவது இல்லை. தமிழகத்தில் தினமும் 2000-க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் சுயஉதவி குழுவினரையும் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறார். அத்துடன் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.  

அந்த வகையில், கடந்த முறை 31 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார்.  அதனை தொடர்ந்து தூத்துக்குடி,  விருதுநகர், அரியலூர் மற்றும் பெரம்பலூரிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும்  4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்,  பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதனிடையே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அடிக்கல் நாட்டுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து