முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருப்பமுள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஏளுரில் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதாரத்துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதல்வர்  கூறி உள்ளார். அதன்படி பள்ளிகள் செயல்படும்.  இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம்.  விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். 

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம்.  முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட உள்ளது.

இதற்காக 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும்.  ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம்.  மதிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து