ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் - ரிஷப் பண்ட்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      விளையாட்டு
Rishabh-Pund 2021 01 20

Source: provided

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது: 

என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது. 

இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர்.

இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து