முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல் பரவாது: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி.ஜன.26. நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால் அதை பாதுகாப்புடன் உண்பதில் ஆபத்து இல்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ராஜஸ்தான். ஜம்மு  காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய, 12 மாநிலங்களில், காகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும், பறவைகளிடையே 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஒன்பது மாநிலங்களில் பண்ணைக் கோழிகளுக்கும் இந்த நோய் பரவியிருப்பதை, மத்திய அரசு உறுதி செய்தது.

இதையடுத்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுமையாக நன்கு சமைக்கப்பட்ட, கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை. நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சியில் இருந்து தொற்று பரவாது. முட்டைகளை பாதி வேகவைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சியை கையாளும், சில்லரை வர்த்தகர்களும் அதை வீடுகளில் வாங்கி சமைப்பவர்களும், சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பறவைக் காய்ச்சல் தொற்று உள்ள பகுதியில் வசிப்போர் பறவைகளை கைகளால் தொட்டு பழகுவதை தவிர்க்கவும். கோழி இறைச்சியை வெறும் கையால் தொடுவது கூடாது. கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்தே, கோழி இறைச்சிகளை கையாள வேண்டும். இறைச்சியை திறந்தவெளியில் வைக்க கூடாது. பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து, கோழி மற்றும் முட்டைகள் வாங்கக் கூடாது.

வீடுகளில் கோழிகளை வெட்டும் போது கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. மேலும், கோழியை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், சமையலுக்கு பின், கிருமி நாசினி வாயிலாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கோழி இறைச்சியை, நேரடியாக குழாய் நீரில் காட்டி கழுவக் கூடாது. இறைச்சியில் பட்டு தெறிக்கும் நீர் துளிகள் வாயிலாக, தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து