முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கேட்கும் தகவலை தர மறுத்தால் சிறை தண்டனை: வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

அரசு மற்றும் நீதிமன்றங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைதளங்கள் தர மறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்ட விரோதமான கருத்துகளை சமூக வலைதளங்கள் முடக்கம் அல்லது நீக்க வேண்டும். ஒரு செய்தியை பரப்பும் முதல் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களின் புகார்களை பெறவும்,விசாரணை நடத்தவும் தனி அதிகாரி ஒருவரை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும்.  சட்டவிரோதம் அல்லது ஆட்சேபனைக்குரிய விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.  விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஒருவரின் கணக்கை நீக்கினால், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். ஓடிடி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.  நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்கென்று சில வரைமுறைகளும் உள்ளது. ஓடிடி தளங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.  தவறான தகவலை பரப்பும் முதல் நபர் யார் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து