இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஏப்ரல் 2021      உலகம்
Indonesia-Heavy-rain2021-04

இந்தோனேசியாவின் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர். இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்தன. மீட்புப் படையினர் 41 சடலங்களையும், காயமடைந்த 5 பேரையும் மீட்டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்தார். 

மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில் 40 வீடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து