டெல்லியில் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      இந்தியா
Delhi 2021 04

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வருகிற ஏப்ரல் 30-ந்தேதி வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். 

டெல்லியில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 பேர் பலியாகி உள்ளனர். 

டெல்லியில் தற்போது கொரோனா 4-வது அலை பரவல் இருப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து