முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 1,45,384 பேருக்கு தொற்று

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 உயர்ந்துள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை  9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து