முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் தற்போது கொரோனா நான்காவது அலையை சந்தித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 17,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொடங்கியதிலிருந்து அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை ஆகும். மேலும், 104 பேர் கொரோனாவால் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 11,540 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தடுப்பூசியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் வணிக வளாகம், அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடங்கள் வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் திரையரங்குகளில் 30 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது, பார்சல்களை வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. தற்போதைய தரவுகளின்படி, 5000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து