முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50மீ ரைபிஃபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீரர்கள் பிரதாப், சஞ்சீவ் ராஜ்புட் ஏமாற்றம்

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் 50மீ ரைபிஃபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 21-வது இடத்தையும், சஞ்சீவ் ராஜ்புட் 32-வது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.

39 வீரர்கள்... 

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட் உள்பட 39 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்படும் 8 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

21-வது இடம்...

இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் நீலிங் முறை சுடுதலில் 397 புள்ளிகளும், ப்ரோன் முறை சுடுதலில் 391 புள்ளிகளும், ஸ்டேண்டிங் முறை சுடுதலில் 379 புள்ளிகளும் என மொத்தம் 1167-63x புள்ளிகள் பெற்று 21-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.

32-வது இடம்...

மற்றொரு இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்புட்  நீலிங் முறை சுடுதலில் 387 புள்ளிகளும், ப்ரோன் முறை சுடுதலில் 393 புள்ளிகளும், ஸ்டேண்டிங் முறை சுடுதலில் 377 புள்ளிகளும் என மொத்தம் 1157-55x புள்ளிகள் பெற்று 32-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து