முக்கிய செய்திகள்

கொரோனா விதி மீறல்: நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      சினிமா
Mammootty 2021 08 08

Source: provided

திருவனந்தபுரம் : கொரோனா விதி முறைகளை மீறியதாக நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி மற்றும் 300 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கேரள போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆகஸ்ட் 3-ம் தேதி கேரளாவில் தனியார்  மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக ரோபோவை பயன்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் கேரள நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவின் போது சுமார் 300 பேர் அங்கு கூடியதால்  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி,மருத்துவமனை நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி , மற்றும் 300 பேர்கள் மீது தொற்றுநோய் நோய் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்  கீழ் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து