முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமைக்கா முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

217 ரன்களுக்கு...

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

253 ரன்களுக்கு... 

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3-ம் நாள் முடிவில்...

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

203 ரன்களுக்கு... 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் அசாம் 58 ரன்னில் அவுட்டானார். ஹசன் அலி 28 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

168 ரன்கள் இலக்கு...

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீலஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிளாக்வுட் அபாரம்... 

பிராத்வெயிட் 2 ரன், கிரன் பாவெல் 4 ரன், பானெர் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. அடுத்து இறங்கிய ரோஸ்டன் சேஸ், பிளாக்வு ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து 68 ரன்கள் சேர்த்த நிலையில், சேஸ் 22 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார்.

முன்னிலை பெற்றது...

கேப்டன் ஹோல்டர் 16 ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் அடுத்து இறங்கிய கீமர் ரோச் நிதானமாக ஆடினார். அவர் பொறுப்புடன் ஆடி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது சீலஸ்க்கு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து