எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று மனிதவள மேலாண்மை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதற்கு, அத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலுரையில் கூறியதாவது
மாற்றங்களை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். ஏற்கெனவே இது 30 சதவீதமாக இருந்தது. இதற்குரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
போட்டித் தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


