முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்தது

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர்  : ஒடிசா மாநிலத்தில், கோதுமை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றுக்குள் விழுந்தன. என்ஜின் டிரைவர் உயிர் தப்பினார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பிரோஸ்பூரில் இருந்து குர்தா ரோடு நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை ஒரு சரக்கு ரயில் புறப்பட்டது.

அதில், கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தன. அங்குல் ரயில் நிலையத்தை தாண்டி, நந்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது.

ரெயிலின் 6 பெட்டிகள், நந்திரா ஆற்றுக்குள் விழுந்தன. நல்ல வேளையாக, என்ஜின் பகுதி, தண்டவாளத்திலேயே நின்று விட்டதால் என்ஜின் டிரைவர் உள்ளிட்ட ஊழியர்கள் உயிர் தப்பினர். கனமழையால், தண்டவாளம் முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

அந்த தண்டவாளம், ஒற்றைப்பாதை என்பதால், அந்த வழியாக வேறு ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 8 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து