எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாவட்டங்கள் மறுசீரமைப்பு காரணமாக அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். இந்த 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக இதில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களை அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 22-ம் தேதி ஆகும். 23-ம் தேதி வேட்பு மனு ஆய்வு நடைபெறுகிறது. 25-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறலாம். முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதியும் நடக்கிறது. 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் 16-ம் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 20-ம் தேதி பதவி ஏற்கிறார்கள். 22-ம் தேதி மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் ஆகும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளிலும் தேர்தல் நடை பெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
செங்கப்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை, திருக்கழுகுன்றம், திருப்போரூர், லத்தூர், காட்டாங்கொளத்தூர், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திரிசூலம், முடிச்சூர், வேங்கை வாசல், பொழிச்சலூர், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இந்த பகுதிகளில் முதல்நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 19 யூனியன் அலுவலகங்களிலும் தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 214 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 232 இடங்களிலும் நேற்று மனுத்தாக்கல் நடந்தது. நேற்று வேட்பு மனு தாக்கலின் முதல் நாள் என்பதால், விறுவிறுப்பு காணப்படவில்லை. சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமங்களில் பதவிகளை கைப்பற்ற அதிக போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக கிராம பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்று யூனியன் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். இதன்காரணமாக அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: ஒருவர் கைது
15 Nov 2025சென்னை சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்தனர்.
-
வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் பலி
15 Nov 2025ஹனோய், வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



