முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் கடவுள் இல்லை - எஸ்.ஏ.சி அறிவுரை

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக உருவாக்கியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' ,'நான் சிகப்பு மனிதன்' ,  'நீதிக்கு தண்டனை' போன்ற படங்கள் வரிசையில் உருவாகி இருப்பதே நான் கடவுள் இல்லை படம். இப்படத்தில் இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன்.

சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அது கேட்கப் பட்டதா இல்லையா என்பதுதான் கதை. மேலும், இளம் இயக்குனர்களுக்கு சொல்ல விரும்புவது, எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

உண்மைகளைப் பேச வேண்டும். அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள். சமூக சிந்தனையுடன் சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், குழந்தை நட்சத்திரம் டயானா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து