முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ஒரு நாள் கலெக்டராக அமரவைத்த ஆட்சியர்

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அகமதாபாத்: பிரெயின்டியூமர் எனப்படும் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்ற அவரை ஒரு நாள் மாவட்ட கலெக்டராக அமரவைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அகமதாபாத்தில் நடந்துள்ளது.

அகமதாபாத் காந்தி நகரை சேர்ந்த புளோரா அசிடியா என்ற சிறுமி, 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 7மாதங்களுக்கு முன்னர் அவருக்கு மூளையில் புற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  படித்து முடித்த பின் கலெக்டராக வேண்டும் என்ற சிறுமியின் ஆசையை அறிந்த மாவட்ட ஆட்சியர்  சந்தீப் சிங்களே சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு, தமது இருக்கையில் சிறுமியை ஒரு நாள் அமரவைத்து, விருப்பத்தை நிறைவேற்றும் நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார். 

உடல்நலம் மிகவும் பாதிகப்பட்டுள்ள நிலையிலும், கலெக்டரின் இருக்கையில் அமர்ந்த சிறுமிக்கு அங்கிருந்த அதிகாரிகள் பரிசுப் பொருட்களை வழங்கி விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தனர். மனதை உருக்கும் இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் புகைப்படங்களுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து