முக்கிய செய்திகள்

இந்திய அணியில் 'டிராவிட் - டோனி': முன்னாள் செலக்டர் பிரசாத் விருப்பம்

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      விளையாட்டு
Prasad---2021-10-13

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உலகக்கோப்பை டி20-உடன் விலகிவிடுவார் என்பதால் அடுத்ததாக டிராவிட் பயிற்சியாளராகவும் டோனி ஆலோசகராகவும் தொடர்ந்தால் மிக நன்றாக இருக்கும் என்கிறார் முன்னாள் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத். தெரிவித்துள்ளார்.

உச்சம் தொடும்....

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக டோனியை நியமித்ததை எம்.எஸ்.கே. பிரசாத் வரவேற்றுள்ளார். அதே போல் ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றால் இந்திய அணி புதிய உச்சங்களை இந்திய அணி தொடும் என்று எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் எம்.எஸ்.கே. பிரசாத் கூறும்போது, “இந்திய அணியின் எதிர்காலம் ராகுல் டிராவிட், டோனி கையில் ஒப்படைக்கப்பட்டால் அணி உச்சம் தொடும். டோனியும் திராவிடும் இந்திய அணியின் மெண்ட்டார் மற்றும் தலைமைப் பயிற்சியாளர், இது பார்ப்பதற்கே அருமையாக இருக்கும்” என்று கூறுகிறார் எம்.எஸ்.கே. பிரசாத்.

சிறந்த வீரர்களை...

 

இதுதான் பல கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமும், அதை அப்படியே பிரசாத் எதிரொலித்துள்ளார். டோனியின் கேப்டன்சி திறமை, பிட்சை கணிக்கும் திறமை, அணித்தேர்வு, உத்தி வகுப்பு பற்றி டி20 கிரிக்கெட்டில் கூற வேண்டியதில்லை. அதே போல் பயிற்சியாளராக, ராகுல் திராவிடின் திறமைகளையும் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கெனவே யு-19 அணிகள், இந்தியா ஏ அணியிலிருந்து ஏகப்பட்ட வீரர்களை அவர் இந்திய அணிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து