முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்: யுனிசெப் ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      உலகம்
pregnant-women-2021-10-21

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது. கொரோனா காலத்தில் கடுமையான உணவுப்பற்றாக்குறையும், வறுமையும் நிலவியது என்று யுனிசெப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனிசெப் இந்தியா சார்பில் "சமூக அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சமூக பொருளாதார சூழ்நிலையில் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.அந்த ஆய்வு இந்திய மனித மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து யுனிசெப் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் ஏறக்குறைய 6 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,தமிழகம், தெலங்கானா, உ.பி. ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 12 மாவட்டங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. கொரோனா காலத்தில் போதுமான அளவு உணவு கிடைப்பதில் உள்ள சவால்கள் கணக்கில் எடுக்கப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., இந்த ஆய்வில் பங்கேற்ற குடும்பங்களில் 60 சதவீதம் கர்ப்பணிகள் மட்டும் அதாவது ஐந்தில் 3 பகுதி மட்டுமே 3 வேளை உணவு சாப்பிட்டதாகத் தெரிவித்தனர். தங்கள் வாழும் பகுதியில் உணவுப் பற்றாக்குறை, உணவு கிடைப்பதில் சிரமம், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் 3 வேளை சாப்பிடமுடியவில்லை எனத் தெரிவித்தனர். போதுமான அளவு உணவு கிடைக்காதது கர்ப்பிணிகளை மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்காமல் பாதித்துள்ளது.

 

இந்தஆய்வில் நகர்புறங்களில் வசித்தவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர், ஆனால் கிராமப்புறங்களில் வசித்தவர்களுக்கு ஓரளவுக்கு உணவுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து