முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ல் சபரிமலையில் கோவில் நடை திறக்கப்படும் நாட்கள் : அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தானம்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சபரிமலை : பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த ஆண்டு (2022) நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மாசி மாத பூஜைக்காக கோவில் நடை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9-ந் தேதி திருவிழா கொடியேற்றம். 18-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.

சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்பட்டு 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந்தேதி விஷூ பண்டிகை விழா நடக்கிறது. வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

சபரிமலை சபரிமலையப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக 2022 ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.

ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும். புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்படும். 22-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலைசபரிமலையப்பன் கோவில் நடை அக்டோபர் 24-ந் தேதி திறக்கப்படும். 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். 2022-ம் ஆண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து