முக்கிய செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

Stelin 2021 09 27

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் நாளை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி காட்சி...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

திட்டங்களின் நிலை... 

வரும் 26ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.  இதனைத்தொடர்ந்து, மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் 26ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து