முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையை திறந்த விவகாரத்தில் கம்யூ. கட்சியினர் வாய் திறக்காதது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் காட்டமான கேள்வி

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

மதுரை : முல்லை பெரியாறு அணையைத் திறந்த விவகாரத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட் டினார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் 142 அடியாக தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்று தந்தார். தற்போது மழையால் அணையின் நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அணையைப் பார்வையிட்டு 142 அடி நிரம்பும் முன்பே கேரள பகுதிக்கு தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார்.

ஆனாலும், தமிழக நீர்ப் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, பெரியாறு அணையைத் திறந்து விட்டது தமிழகம்தான் எனக் கூறிவருகிறார். முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரைத் திறந்ததால் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாயிகளின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது. பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, கடமை தமிழக அரசுக்கு உள்ளது. உண்மை நிலையை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் வலியுறுத்தி உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் வாய் திறக்க அஞ்சுகின்றனர். மேலும், ரூ. 1,500 கோடியில் கேரள அரசு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. தமிழக அரசு 142 அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து