முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பிரதமராக கிஷிடா மீண்டும் தோ்வு

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் புமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதை தொடா்ந்து, நாட்டின் பிரதமராக அவா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்று புகாா் எழுந்தது. அதையடுத்து, தனது பதவிக் காலம் முடிவதற்கு சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை ராஜிநாமா செய்தாா். சுகாவுக்குப் பதிலாக புமியோ கிஷிடோ பிரதமரானாா். 

 இந்த நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி நடைபெற்ற தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து