முக்கிய செய்திகள்

கால்நடை பராமரிப்புத் துறையில் 23 பேருக்கு பணிநியமன ஆணைகள் : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      தமிழகம்
CM-1 2021 11 17

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர்,  கால்நடை பராமரிப்பு உதவியாளர்,  பதிவறை எழுத்தர்,  அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை  முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் முனைவர்  வெ. இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தெ.சு.ஜவஹர்,  கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அ.ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து