முக்கிய செய்திகள்

இளம் எழுத்தாளர்கள் கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

Source: provided

சென்னை : கவிமணி விருதுக்கு தங்களது படைப்புகளை அனுப்ப இளம் படைப்பாளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ. 25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. 

 

இதனை   செயல்படுத்தும்   வகையில்,     பொது  நூலக  இயக்ககம்,   இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில், கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியிலிருந்து சுய விவர படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து 31.12.2021க்குள் தங்களது படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002. என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். 

 மேலும்,  விவரங்களுக்கு  இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வே. தினேஷ் குமார் (அலைபேசி எண்: 99414 33630) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து