முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், திருத்தம்  மற்றும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாக இன்று 27, நாளை 28 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.  

 இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 01.01.2022 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம்  மற்றும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாக 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  மேலும்  www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி (Voter Helpline Mobile App)  ஆகிய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து