முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில்  மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து