முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தொடர் கனமழை: 5 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு.,

1) ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

2)  தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

3) கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.

4)  வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

5) வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

6) சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

7) மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டடுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

8) துரைசாமி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளதால் - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

9) கணேஷபுரம் சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளதால் - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

10) தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து