முக்கிய செய்திகள்

மைக்கேல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Gautam 2021 11 28

Source: provided

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் படம் மைக்கேல். இப்படத்தில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன் புரட்சிக்கரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ‘மைக்கேல்’ படத்திற்கு வித்தியாசமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து