எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வரத்து குறைந்ததையடுத்து, தக்காளி விலை மீண்டும் சதம் அடித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து உள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து குறைந்தது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு, 40 லாரிகளில், 600 டன் தக்காளி மட்டுமே நேற்று முன்தினம் வந்தது. சென்னைக்கு, 1,100 டன் தக்காளி தேவை உள்ளது. இதில், மகராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, 10 லாரிகள் வந்தன. வரத்து குறைவு காரணமாக, ௧ கிலோ தக்காளி, 90 -- 100 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், காய்கறி வரத்து குறைவால், மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. கிலோ பீன்ஸ், 80 -- 90 ரூபாய்க்கும், நுாக்கல், 80, முருங்கைக்காய், 150 -- 180, கேரட், 50 -- 75 ரூபாய்க்கும் விற்பனையானது.
கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி, தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி, நவம்பர் 3-ம் தேதி, கோயம்பேடு சந்தையில், தக்காளி லாரிகள் நிறுத்த, ஒரு ஏக்கர் நிலத்தை, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். இருந்தும் விலை குறையாமல் தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை எட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


