முக்கிய செய்திகள்

டெல்லியில் கெஜ்ரிவால் வீடு முன் ஆசிரியர்களுடன் சித்து போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Sidhu 2021 12 05

Source: provided

புதுடெல்லி : பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஆட்சியாளர்களை குறைகூறி வரும் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சி ஆளும் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முன்பு ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தில் சித்து பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் முக்கிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அக்கட்சியின் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் அங்கு அடிக்கடி சென்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த மணிஷ் சிசோடியா, அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங்கின் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி, அம்மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். அம்மாநிலம் மொகாலியில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கலந்து கொண்டார். டெல்லி பள்ளியில் பணிபுரியும் கவுரவ ஆசிரியர்கள், தங்களது பணியை ஒழுங்குபடுத்த வேண்டும் எனக்கூறி கெஜ்ரிவால் வீடு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தில் பங்கேற்ற சித்து, கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். 

தொடர்ந்து, பஞ்சாப் தேர்தலில் தங்களது முக்கிய சாதனையாக ஆம் ஆத்மி கட்சியினர் ஆன்லைனில் பிரச்சாரம் மேற்கொள்ளும் கல்வி முறையை விமர்சித்து சித்து வெளியிட்ட அறிக்கையில், 

ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தர ஆசிரியர்களாக நியமித்து, அவர்களுக்கு இணையாக சம்பளம் வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. ஆனால், கவுரவ ஆசிரியர்களாகவே உள்ளனர். பள்ளிகளின் வளர்ச்சிக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட ரூ. 5 லட்சம் நிதியை, ஆம் ஆத்மி தன்னார்வலர்கள், பள்ளி நிர்வாக குழு மூலம் பெற்று வருகின்றனர். டெல்லி கல்வி முறை என்பது ஒப்பந்த முறை ஆகும். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் வேலைவாய்ப்பின்மை 5 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து