முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்டும் கடும் குளிர்: வட மாநிலங்களில் பொதுமக்கள் அவதி

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காற்றுமாசு அதிகரிப்பால் தலைநகர் புதுடெல்லி மற்றும் உத்தப்பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வாட்டும் குளிரால் வடமாநிலங்களில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களை கடும் குளிர் வாட்டி வருகிறது.  அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் பிற்பகல் வரை நீடிப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 12 டிகிரியாக குறைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் கடும் குளிருடன் பனிமூட்டம் காணப்பட்டது.  மக்கள் சாலையோரங்களில் தீ வளர்த்து குளிர் காய்ந்து வருகின்றனர்.  

பனிமூட்டம் மற்றும் குறைவான வெளிச்சத்தால் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவத்து நெரிசல் காணப்பட்டது. புதுடெல்லி குருகிராம் பகுதிகளில் பனிமூட்டத்துடன் காற்று மாசு அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நொய்டாவில் காற்று மாறு ஆபத்தான அளவை தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் மற்றும் பறவைகள்  கடும் குளிரால் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகள் வசிக்கும் கூண்டுகளில் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.  இங்குள்ள உயிரினங்களுக்கு அதிக சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக உயிரியல் பூங்கா இணை இயக்குநர் உட்கர்ஷ் சுக்லா தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரெங்கா வன விலங்கு சரணாலயத்தில் குளிரை தாங்கும் வகையில் யானை குட்டிகளுக்கு கம்பளி ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து