முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும்: மசாஜ் சென்டர்களில் சிசிடிவி வைப்பது சுப்ரீம் கோர்ட் விதிகளுக்கு எதிரானது : ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருக்கிறது.

திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் க்ராஸ் ஸ்பா சென்டர் எனும் பெயரில் ஸ்பா நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்பா தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான சரியான விதிகள் ஏதுமில்லை. எனவே ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி சென்டர்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தவும் அது இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடன், சட்டவிரோத செயல்களுக்கு இடம் கொடாமல் நடத்தவேண்டும். சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

”ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது. நபர்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம். 

இந்த விவகாரங்களில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து