முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் ஒத்துழைத்தால் ஒமைக்ரான் பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மக்கள் ஒத்துழைத்தால் ஒமைக்ரான் பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஒமைக்ரான் அனைத்து மாநிலங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று உறுதியாகுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது.  ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 250-க்கும் மேற்பட்டவர்களும், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 200-க்கும் மேற்பட்டவர்களும் ஒமைக்ரான் வார்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து வந்தேன்.

யாருக்கும் 2-வது அலையில் டெல்டா வைரஸ் ஏற்படுத்தியது போல் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக யாருக்கும், மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அனைவருக்கும் சாதாரண சிகிச்சை முறையே தேவைப்படுகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 150-க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.

எனவே டெல்டா வைரஸ் போல் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.  தொற்று ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலே போதும். மக்கள் ஒத்துழைத்தால் ஒமைக்ரான் விரைவில் கட்டுக்குள் வரும். 100 வயதான கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா ஒமைக்ரான் தொற்றால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரை நேரில் பார்த்தேன். நலமுடன் இருக்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து