முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னையில் சாலை இடும் பணிகளை செய்து வருவோருக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,

சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.  அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து