முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவால் கடத்தப்பட்டதாக கருதப்படும் அருணாசல் சிறுவனை மீட்க இந்தியா ராணுவம் முயற்சி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவனை மீட்கும் நடவடிக்கை நடைபெறுவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் உள்ள 5 இடங்களின் பெயர்களையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவம் அவனை கடத்தி சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.   ஆனால் இந்திய சிறுவன் மாயமானது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என சீனா  கூறியுள்ளது.  

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சீன ராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து