முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான நிதியை வழங்கிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்திற்கு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்கிட வேண்டிம் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். 

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (கூடுதல் பொறுப்பு), இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் மற்றும் ஊராட்சி துறை  மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பேசியதாவது, 

தமிழகத்தில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் I மற்றும் II-ன் கீழ் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் III-ன் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டிற்கான சாலைகள் மற்றும் பாலங்களுக்கான பிரேரணைகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஒன்றிய அரசினை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார். 

மேலும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)-ன் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார் மற்றும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு உரித்தான நிதியினை விரைந்து வழங்கிடவும் ஒன்றிய அரசினை கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து